நடிகர் அரவிந்த் சாமியின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா?…. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் அரவிந்த் சாமியின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா?…. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் முதன்முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தளபதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து ரோஜா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இடையில் சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக புதிய அவதாரம் எடுத்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது இவரின் நடிப்பில் நரகாசுரன், கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதனிடையே அரவிந்த்சாமி கடந்த 1994 ஆம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர்.

Advertisement

பின்னர் 2010 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அரவிந்த்சாமியின் மகள் ஆதிரா சமையல் கலை வல்லுனராக உள்ளார். அவரின் மகன் ருத்ரா சில வருடங்களுக்கு முன்பு ஜிபி என்ற இன்டர்நேஷனல் பேக்கலரேட் படிப்பை முடித்தார். இந்நிலையில் அரவிந்த்சாமியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in