LATEST NEWS
நடிகர் சதீஷ் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் சதீஷ். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்ததை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவ்வாறு பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அடுத்தடுத்த இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையே சதீஷ் இயக்குனர் சாச்சியின் தங்கையான சிந்துவை கலந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் நடிகர் சதீஷ் தான் அப்பாவாகி விட்டதாக மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து உள்ளார். தனது மனைவியுடன் லேட்டஸ்ட் ஆக எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
