தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காமெடி நடிகர்கள் பலரும் உள்ளனர்.

அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தனது திறமையால் விரைவாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் முத்துக்காளை. இவர் முன்னணி காமெடி நடிகர்களுக்கு நிகராக வளர்ந்து வந்தார்.

அதிலும் குறிப்பாக என் புருஷன் குழந்தை மாதிரி என்ற திரைப்படத்தில் செத்து செத்து விளையாடுவோமா என்று இவர் பேசும் டயலாக் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இதுவரை ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இப்படி பிசியாக இருந்து வந்த இவர் தொடர்ந்து குடியில் மூழ்கி இருந்ததால் முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தை பிடிக்காமலேயே வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டார்.

தற்போது இவரை சிறு பட்ஜெட் திரைப்படங்களில் கூட காண முடியவில்லை. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடிவேலுவுடன் அடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

அப்போது பணம் மற்றும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் அல்வா வாசு உடன் சேர்ந்து எந்த நேரமும் குடித்துக்கொண்டே இருந்துள்ளார்.

ஒருமுறை இவரை பார்த்து வடிவேலு கூட இப்படியே எந்த நேரமும் குடித்துக்கொண்டு இருந்தால் முதலில் வாசு அதுக்கு அப்புறம் நீ சாகப் போற என திட்டியுள்ளார்.

அதன் பிறகு குடும்பத்தை பற்றி அக்கறையை மனதில் கொண்டு குடிப்பழக்கத்தை விட்டு விடும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இதனால் அவரின் வார்த்தைகளை உணர்ந்த முத்துக்களை மெல்ல மெல்ல குளிப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்து தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் பாலிவுட் திரை உலகில் மேரே இந்தியா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் காமெடியன் ஒருவர் பாலிவுட் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.