LATEST NEWS
விஜய்யின் உயிர் நண்பர் சஞ்சீவின் மகனை பார்த்துள்ளீர்களா?…. ஹீரோ போல இருக்காரே…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜயின் நெருங்கிய நண்பர் தான் நடிகர் சஞ்சீவ். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே விஜய் மற்றும் சஞ்சீவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி காலத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அதே அன்புடன் சினிமா வரை இவர்களின் நட்பு தொடர்கின்றது. அந்த நட்போடு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை, நிலாவே வா, பத்ரி மற்றும் சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் சஞ்சீவை நடிக்க வைத்தார்.
அது மட்டுமல்லாமல் மெட்டிஒலி என்ற சீரியல் மூலமாகவும் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் தற்போது நடித்து வருகின்றார். அதே சமயம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். இதனிடையே சஞ்சீவிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சஞ்சீவ் மகனை பார்த்த பலரும் அச்சு அசல் ஹீரோ போல இருப்பதாக கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.