தி பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இந்நிலையில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இத்தாலியில் நடைபெற உள்ள ரோம் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்.