CINEMA
ஜெயம் ரவி உங்களோடு பத்திரமாக இருக்கிறாரா…? முதன்முறையாக வாயை திறந்த பாடகி கெனிஷா…. ரசிகர்கள் ஷாக்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் ஜெயம் ரவி குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜெயம் ரவி கோவாவில் கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியோடு நெருக்கமாக இருப்பதாகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரகசியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜெயம் ரவி உங்களோட பத்திரமாக இருக்கிறாரா? என்று பாடகி கெனிஷாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கடுப்பான பாடகி கெனிஷா நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்ப இருக்கிறீர்களா? உங்களுடைய கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர் தானா? என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். பாடகி கனிஷாவின் இந்த பதிவு ஜெயம் ரவி- ஆர்த்தி பற்றி மோசமான பதிவிற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.