LATEST NEWS
தொகுப்பாளர் To நடிகர்…. ரியோ ராஜின் மகள் மற்றும் மனைவியின் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் ரியோ ராஜ்.
இவர் முதல் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
பல வருடங்கள் இசை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு விஜய் டிவி பக்கம் முதலில் சின்னத்திரை நடிகராக நுழைந்தார்.
அதாவது விஜய் டிவியின் பிரபலமான செயல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்த சீரியலில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் அதனை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.
அதேசமயம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி சத்ரியன், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, காதல் ஒன்று கண்டேன்,பிளான் பண்ணி பண்ணனும் மற்றும் ஜோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து இவர் பல திரைப்படங்களின் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பிசியான நடிகரான ரியோ ராஜ் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஒரு அழகிய மகளும் உள்ளார்.
தற்போது ஆறாவது திருமண நாள் வர ரியோ ராஜ் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில் தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ரியோவின் மகளா இவர் நன்றாக வளர்ந்து விட்டாரே எனக் கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.