நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! “சாப்பாடு தீர்ந்துபோச்சு” உணவு தர மறுத்த ஊழியரின் தலையில் பாய்ந்த கத்தி… தப்பியோடிய கும்பலுக்குப் போலீஸ் வலைவீச்சு.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! “சாப்பாடு தீர்ந்துபோச்சு” உணவு தர மறுத்த ஊழியரின் தலையில் பாய்ந்த கத்தி… தப்பியோடிய கும்பலுக்குப் போலீஸ் வலைவீச்சு.!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள நயா காவ்ன் பகுதியிலுள்ள ஹனுமான் தாபாவில் உணவு கிடைக்காததால் ஏற்பட்ட தகராறில், உணவக ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். திங்கள்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் உணவகம் மூடப்படும் நேரத்தில், கார் மற்றும் பைக்கில் வந்த 5 முதல் 6 நபர்கள் உணவு கேட்டுள்ளனர். உணவகம் மூடும் நேரம் என்பதால் சமையல் முடிந்துவிட்டது என்று ஊழியர்கள் கூறியதால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர், அக்கூட்டத்தினர் நேரடியாகச் சமையலறைக்குள் சென்று உணவு சமைத்துத் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த 28 வயதான மகேந்திரா என்ற ஊழியர் உணவு இல்லை எனக் கூறியதால், கோபமடைந்த ஒரு நபர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். இந்தக் தாக்குதலில் மகேந்திராவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதை அடுத்து, தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

Advertisement

காயமடைந்த மகேந்திரா உடனடியாக பாலி பங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது தலையில் 5 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கூறுகையில், தாக்குதல் நடத்திய கும்பலில் இரண்டு காவலர்களும் இருந்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த டிரான்ஸ்போர்ட் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வாக்குமூலங்களைப் பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in