“அடக்கடவுளே.. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள்… நடுரோட்டில் சுயநினைவின்றி கதறிய இளம்பெண்.. சக வாகன ஓட்டிகள் செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கடவுளே.. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள்… நடுரோட்டில் சுயநினைவின்றி கதறிய இளம்பெண்.. சக வாகன ஓட்டிகள் செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!!

Published

on

கிழக்கு ஜாவாவின் சிடோவார்கோ பகுதியில் உள்ள பலூர் சாலை ஓரத்தில், இளம்பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் நேற்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலில் ஏற்பட்ட உறவு முறிவு காரணமாகவே அந்தப் பெண் இத்தகைய கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சாலையில் வேகமாகச் சென்ற வாகனங்களுக்கு மத்தியிலும், சுயநினைவை இழந்தது போல் அவர் அழுதுகொண்டிருந்ததால், விபத்து ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த சக வாகன ஓட்டிகளும் உள்ளூர் பொதுமக்களும் உடனடியாகச் செயல்பட்டு, அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர். மற்ற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், அவர் சாலையோரத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அந்தப் பெண் பத்திரமாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in