Uncategorized
என் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்கள்… மக்களை திட்டிய பிரதமர் “நரேந்திர மோடி” என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்…..

கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவுரைகளையும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியாக
பின்பற்றவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
‘கொரோனா வைரஸ் ஆபத்தையும், ஊரடங்கு உத்தரவையும் பெரும்பாலான மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. கொரோனா தாக்கத்தின் தன்மையை மக்கள் உணராமல் இருப்பது கவலையளிக்கிறது. தயவுசெய்து மத்திய அரசு கூறும் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதேபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று நடந்த மக்கள் சுய ஊரடங்கை கூட பலர் தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை. பலரும் வெளியே சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு மிக கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் உள்ளனர் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.