எங்களுக்கு எங்க நாடு தான் முக்கியம்… ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்… முதலில் விலகும் நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா…? - cinefeeds
Connect with us

Uncategorized

எங்களுக்கு எங்க நாடு தான் முக்கியம்… ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்… முதலில் விலகும் நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா…?

Published

on

கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியில் கனடா நாடு பங்கேற்காது என அந்த நாடு தெரிவித்துள்ளது….

 

Advertisement

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு, எல்லைகள் மூடல், போக்குவரத்து ரத்து என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வைரஸால் பல நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

 

Advertisement

இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால், தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதில் கனடா நாடு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவதாக தெரிவித்துள்ளது. தாங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்துள்ள கனடா, கொரோனா அச்சம் முற்றிலும் மறையும் வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in