LATEST NEWS
உலகின் டாப் 50 நடிகர்களின் பட்டியலில்…. இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இன்னும் சொல்லப்போனால் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .
இந்நிலையில் திரையுலகை பொருத்தவரை ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியிடப்படும். அதன்படி தற்போது உலகின் 50 சிறந்த நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஷாருக்கான் பெயரும் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் மட்டும்தான். இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் ரசிகர்கள் அவரை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.