LATEST NEWS
இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ளயா?…. கேக் வெட்டி கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் குழு…. எதற்காக தெரியுமா….????

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
தினம்தோறும் புது புது திருப்பங்களுடன் சீரியல் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீரியல் குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதாவது பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 700 எபிசோடுகளை எட்டி விட்டது. அதனை கொண்டாடும் விதமாக சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க