LATEST NEWS
போற போக்க பாத்தா ஹீரோயினி ஆயிடுவாங்க போல…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் நமக்குத் தெரிந்த பல போட்டியாளர்களும் உள்ளே நுழைந்துள்ளனர். தெரியாத முகம் கொண்ட பல போட்டியாளர்களும் உள்ளனர். அப்படி பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு கொண்டவர் தான் நிவாஸினி.
இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறிடம் பல சேட்டைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அசல் கோளாறு வெளியேறிய இரண்டு வாரங்களில் நிவாஸினி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் போற போக்க பார்த்தா ஹீரோயினி ஆயிடுவாங்க போல என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க