VIDEOS
ஜூலை 28 பெரிய சம்பவம் இருக்கு… தனுஷின் கேப்டன் மில்லர் குறித்து ஜான் கொக்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். நிவேதிகா சதீஷ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இந்த திரைப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு கடந்த ஜூன் 19ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேப்டன் இல்ல திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து நடிகர் ஜான் கொக்கன் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து உள்ள நிலையில் அதை தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க