VIDEOS
கார் விபத்தில் உயிரிழந்த தோழி… இரண்டாம் ஆண்டு நினைவு நாள்… உருக்கமான பதிவுடன் வீடியோ வெளியிட்ட யாஷிகா..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது மற்றும் அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரியிலிருந்து விருந்தில் பங்கேற்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பினார். அப்போது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் யாஷிகா பெரிய காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
ஆண் நண்பர்கள் இருவரும் காயம் அடைந்த நிலையில் விபத்தில் தோழி வள்ளி செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் பலியான யாஷிகாவின் தோழி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக இருந்த நிலையில் யாஷிகாவை பார்ப்பதற்காக இந்தியா திரும்பினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தோழியை சந்தித்ததால் புதுச்சேரியில் விருந்து வைப்பதற்காக யாஷிகா அழைத்துச் சென்ற நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து யாஷிகா மீது பல வழக்கு தொடரப்பட்ட நிலையில் பல மாத விசாரணைக்கு பிறகு இது முடிவுக்கு வந்தது. இந்நிலையில் யாஷிகா தனது தோழியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவை பகிர்ந்து வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
