LATEST NEWS
என் வயது என்ன என்னை மாற்றுஅந்த வயதை நான் மாற்றுகிறேன்….! புதிய உத்வேகத்தில் களமிறங்கும் ஜோதிகா…..!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு முன்பு படு பிசியாக நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார் .36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து மகளிர் மட்டும் ,நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக் பாட், பொன்மகள் வந்தால், உடன்பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்துள்ளார்.
தற்போது மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் புதிய படம் ஒன்று நடிக்க உள்ளார். மம்பட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தயாரித்த ஜியோ பேபி இயக்க வுள்ளார்.
ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘காதல் தி கோர்’ என்ற பெயர் படத்திற்கு பேரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோதிகா இந்த திரைப்படத்திற்காக கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்து கொள்கிறேன். வயது என்ன என்னை மாற்றுவது அந்த வயதை நான் மாற்றுகிறேன் என்று தெரிவித்திருந்தார் .இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.