“தங்கச்சியா நடிக்க மாட்டேன்” அஜித்தோடு ஜோடி சேர ஆசைப்படும் இளம் முன்னணி நடிகை…!! – cinefeeds
Connect with us

CINEMA

“தங்கச்சியா நடிக்க மாட்டேன்” அஜித்தோடு ஜோடி சேர ஆசைப்படும் இளம் முன்னணி நடிகை…!!

Published

on

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க தொடங்கி விடுவார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும்.

அஜித்திற்கு பல நடிகைகளும் ஜோடியாக வேண்டும் என்று ஆசை படுவதுண்டு. அந்தவகையில்  நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது அஜித்தின் தங்கையாக நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் தங்கையாக அல்ல ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in