CINEMA
களை கட்டப்போகும் BIGGBOSS-8 : போட்டியாளர்களின் லிஸ்டில் திடீர் மாற்றம்…. இவங்களும் இருக்காங்களா…??

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்கியது. தற்போது கமலஹாசன் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் இந்த ஷோவிலிருந்து திடீரென்று விலகி உள்ளார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .
இதற்கிடையில் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டது. கடந்த சீசன்களின் முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காதவர்களின் பெயர்களும் விஜய் டிவியோடு நெருக்கமான தொடர்புடைய ஆர்டிஸ்ட்களும், நடிகர் அஸ்வின், ஜாக்குலின் போன்றோரின் பெயர்களும் போட்டியாளர்களின் லிஸ்டில் அடிபட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத், டிடிஎஃப் வாசன் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷாலினி சோயா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது .அத்தோடு விஜய் டிவி மாகாபா, கலக்கப்போவது யாரு புகழ் ராமர் , “காத்து மேல” பாடல் பால் டப்பா போன்றவர்களின் பெயர்களும் உள்ளது.