CINEMA
நாக சைதன்யா-சோபிதா பிரிவை கணித்த பிரபல ஜோதிடர்…? சர்ச்சையால் எடுத்த திடீர் முடிவு…. இணையவாசிகள் ஷாக்…!!

நடிகர் நாகசைதன்யா நடிகை சோபிதாவை இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். அதோடு திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பல சர்ச்சையான கருத்துக்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆந்திராவை சேர்ந்த வேணு சுவாமி என்ற ஜோதிடர் நாகசசைதன்யா துலிபாலா திருமண வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்றும் அவர்களின் பிரிவிற்கான காரணத்தையும் பிரியப்போகும் ஆண்டையும் அறிவித்துள்ளார்.
இவருடைய கணிப்பு தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஜோதிடர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. இந்த நிலையில் வீடியோ வெளியிட்ட வேணும் சாமி , நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்துவதற்காக இந்த கணிப்பை வெளியிடவில்லை. ஜோதிடக் கணிப்பை தான் கூறினேன். இனிவரும் காலங்களில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் குறித்தான என்னுடைய கணிப்பை பொதுவெளியில் கூறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.