CINEMA
பாக்ஸ் ஆபிஸை பதறவிட்ட ‘யூத்’..! முதல் படத்திலேயே கென் கருணாஸ் ஹிட் அடிச்சது எப்படி..? இதோ அதிகாரப்பூர்வ வசூல் விவரம்..!”
கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் ‘யூத்’ திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே இயக்குநராகவும், ஹீரோவாகவும் களமிறங்கிய கென் கருணாஸ், ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து சுராஜ், தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் யூடியூபர் மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியானது முதல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படத்தின் வசூல் விவரங்கள் தற்பொழுது வெளியாகி திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தத் தகவலின்படி, ‘யூத்’ திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ. 73.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது சினிமா வட்டாரத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும், நகைச்சுவையும் குடும்ப ரசிகர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மட்டும் இப்படம் சுமார் ரூ. 50.8 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடும்போது இது மிகப்பெரிய லாபகரமான வெற்றியாகக் கருதப்படுகிறது. தற்போது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘யூத்’ திரைப்படம், வரும் நாட்களில் இன்னும் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இறுதி வசூல் எவ்வளவு இருக்கும் என்பதைக் காண ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலாக உள்ளது.
