CINEMA
அப்பவே இவ்வளவு கியூட்டா..? 2014-க்கு பின் திரையில் காணாத சமீரா ரெட்டியின் திடீர் என்ட்ரி – ரசிகர்கள் நெகிழ்ச்சி..!”
சமூக வலைதளங்களில் அவ்வப்போது திரைப்பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்திய அளவில் பிரபலமான ஒரு முன்னணி நடிகையின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் என்று பலரும் ஆவலுடன் தேடி வந்தனர்.
அவர் வேறு யாருமில்லை, தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி தான். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
நடிகை சமீரா ரெட்டி இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, பெங்காலி என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’, அஜித்துடன் ‘அசல்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
