LATEST NEWS
ரஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காம அலஞ்சேன்… ஆனா இப்போ அவர் கூடவே நடிக்குறேன்… பழைய ஜோக் தங்கதுரை நெகிழ்ச்சி..!!

கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பழைய ஜோக் தங்கதுரை. இவருடைய ஜோக்குகள் எல்லாம் பழசாவும் போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும். அதிலும் குறிப்பாக இவர் சொன்ன புளிய மரத்து அடியல புஷ்பலதா மடியல என்ற ஜோக் வேற லெவலில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
இதன் மூலம் பிரபலமான தங்கதுரை சினிமா துறையிலும் கூட நடித்து வருகிறார். இவருக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிக்க கூடியவர். தமிழ் திரையுலகில் எங்கேயும் எப்போதும், மாநகரம், இன்று நேற்று நாளை மற்றும் அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தங்கதுரை லால் சலாம் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் பட குழுவினருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ரஜினியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் ரஜினியின் படத்திற்காக டிக்கெட் கிடைக்காமல் வருத்தத்தோடு திரும்ப வந்த நாட்கள் போய் இப்போ அவரோட படத்துல அவர் பக்கத்துல நடிக்கிற இந்த சந்தோஷமான நாட்கள் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க