LATEST NEWS
விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… அக்டோபர் 19 படம் ரிலீஸ் ஆகாதா?.. திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதுவரை 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் உலக அளவில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாது என்று கூறியுள்ளனர். லியோ இந்தி வெர்ஷன் திரையரங்குகளில் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்படத்தின் ஓடி டி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் அந்த நிறுவனத்தின் விதிமுறைகளின் படி ஒரு படம் வெளிவந்து எட்டு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிடுவார்கள். எனவே லியோ திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் நான்கு வாரங்களுக்கு பின்பு ஓடிடியில் வெளியிட netfliks நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தாலும் தமிழ் வெர்சனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.