CRIME
“நம்பிக்கைக் துரோகத்தின் உச்சம்..” காதலித்தவள் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!”
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் (அக்டோபர் 15) தீயில் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என்பது தெரியவந்தது.
நித்யாவின் குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரும் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்பவரும் காதலித்து வந்த விபரம் தெரியவந்தது. இதனையடுத்து பிடிபட்ட நிஷாந்திடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 12 ஆம் தேதி போடியிலிருந்து இடுக்கிக்குச் சென்ற நித்யாவை, நிஷாந்த் தனது ஆட்டோவில் ஏற்றி பாம்புலா அணைக்கட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நித்யா வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறின்போது ஆத்திரமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்து அவர் மயங்கி விழுந்ததும் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து அவரது உடலில் ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே, காதலித்து வந்த காலத்தில் நிஷாந்த் அவரைப் பலமுறை துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நிஷாந்தைக் கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
