தமன்னாவோடு மொத்தம் 5000 இருக்கும்…. காதலர் விஜய் வர்மா ஓபன் டாக்..!!! - cinefeeds
Connect with us

CINEMA

தமன்னாவோடு மொத்தம் 5000 இருக்கும்…. காதலர் விஜய் வர்மா ஓபன் டாக்..!!!

Published

on

அயன், பையா, பாகுபலி, வீரம், தேவி, அரண்மனை 4 போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் விருது மற்றும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றி பேசிய நடிகர் விஜய் வர்மா தமன்னா குறித்து பேசியுள்ளார். அதில், தமன்னாவின் போட்டோக்கள் பல என்னிடம் இருக்கிறது . அவை மொத்தமாக 5000 இருக்கும். ஆனால் அவை அனைத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அதற்கு முக்கிய காரணம் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கிறோம். அதனால் அவை அனைத்தையும் இதயத்தில் நாங்கள் அன்பாக வைத்திருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Advertisement