CINEMA
உறுதியானது பிக்பாஸ் தொகுப்பாளர்…? அட்ராசக்க இவர் தானா…? செம குஷியில் ரசிகர்கள்…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் திடீரென்று கமலஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால்இதிலிருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரியில் தங்கியிருக்கும் நிலையில் அங்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்தார். அதாவது இயக்குனர் பாண்டியராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு அது. இந்த பின்னணியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி கமிட்டாகி விட்டாரா? என்று கேள்வி எழுந்த நிலையில் அவர் ஏற்கனவே கமிட்டான படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தான் புதுச்சேரி சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் கமிட் ஆகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் விஜய் டிவியின் பிக் பாஸ் புரோமோ டீம் இப்பொழுது புதுச்சேரியில் தான் தங்கி இருக்கிறார்களாம். அதனால் அங்கே ப்ரோமோ தொடங்கி எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.