LATEST NEWS
“மேடம் நீங்க கிரேட்”…. இந்த மனசு வேற யாருக்கு வரும்…. தத்து பிள்ளையை டாக்டராக்கிய நடிகை ரோஜா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏழை குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தையை இழந்த புஷ்பா என்ற பெண்ணை ரோஜா மற்றும் செல்வமணி தம்பதியினர் தத்து எடுத்தனர்.
அது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் படிப்பு செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டனர். பிளஸ் டூ முடித்த அந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி கொடுத்தனர். அவரின் மேற்படிப்பிற்கு தேவையான அனைத்து செலவுகளையும் ரோஜா ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தனர். தற்போது அந்தப் பெண் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரோஜாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.