LATEST NEWS
“மஞ்ச காட்டு மைனா”…. சுடிதாரில் தங்கச்சிலை போல மின்னும் நடிகை சினேகா…. ரசிகர்களை சொக்க வைக்கும் அழகு….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கருத்துக்களை கூறி வந்தனர். இதனிடையே 41 வயதாகும் சினேகா க்யூட்டான போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க