CINEMA
TVK கொடியில் இடம்பெற்றிருக்கும் வாகை மலர்…. இதுல இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கா…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை நேற்று அறிமுகம் செய்தார். அந்த கொடியில் நடுவில் வாகை மலர் இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் யானை இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாகை மலர் குறித்த மருத்துவ குணங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வெற்றி மலர் தான் வாகைமலர். இதை வெற்றியின் சின்னமாகவே பயன்படுத்தினார்கள்.
ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதனுடைய அனைத்து பாகங்களும் மூலிகை பயன் கொண்டது. பூவில் அதிகமான நன்மை இருக்கிறது. இந்த பூ மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் இரு பரவலாக காணப்படுகிறது. மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும் காணப்படும். கண்ணில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, நீர் வடிதல், பார்வை குறைபாடு போன்றவை இல்லாமல் செய்கிறது.
இதற்கு வாகை இலையில் செய்த தேநீர் பருகி வருவதால் நன்மை தரும். இது உடலில் ஏற்படும் நச்சு நீக்க பயன்படுகிறது. பொதுவாக உஷ்ணத்தால் வரும் கட்டிகளை குணப்படுத்துகிறது. அதன் பிறகு ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது .இதன் இலை நுரையீரல் சார்ந்த பிரச்சினை வராமல் பாதுகாக்கிறது .மூச்சு திணறல் பிரச்சனை இருமல் போன்ற பிரச்சனையிலிருந்து நிவாரணம் கொடுக்கும். இந்த மலர்கள் வைத்து விஷக்கடிகளுக்கான மருந்தை தயாரிக்கலாம்.