LATEST NEWS
மெட்டி ஒலி சீரியல் நடிகை காயத்ரியின் அண்ணன் பிரபல நடிகரா?… அவரே வெளியிட்ட புகைப்படம்..!!!

சன் டிவியில் 90களில் மக்களை வெகுவாக கவர்ந்த பல சீரியல்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அந்த சீரியல்களுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல கதைக்களத்தில் நடித்த பிரபலங்கள் முகம் இப்போதும் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கும். அப்படி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த தொடர் என்றால் அது மெட்டிஒலி தான். இந்த சீரியல் கொரோனா காலத்தில் மறுபடி பரப்பு செய்யப்பட்டது. இதில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி.
இவர் ரோஜா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அண்ணன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரா உங்கள் அண்ணன் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். அவர் ரஜினி கதை எழுதி தயாரித்து சிறப்பு வேடத்தில் நடித்த வள்ளி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் மீனா உள்ளிட்டோர் நடித்த சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்திலும் சஞ்சய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க