LATEST NEWS
“பொறாமை மனுஷனை அழிச்சிடும்” மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காங்க… திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மரிய வில்சன்..!!
தவெக அரசின் ஊழலற்ற நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்று, ஆட்சி அமைத்த இந்த 150 நாட்களுக்குள் தங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அவதூறுகளையும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சியினர் சுமத்தி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் மிகக் கடுமையான சாடியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் தற்போது உச்சக்கட்ட விரக்தியிலும், உச்சக்கட்ட பொறாமையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மரியா வில்சன், ‘பொறாமை மனிதனை அழிச்சிடும்’ என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி அது அனைவருக்கும் பொருந்தும் என்று விமர்சித்துள்ளார். தவெக அரசு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்டு பொறுக்க முடியாமல்தான் இத்தகைய வீண்பழிகளை அவர்கள் வாரி இறைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், எதிர்க்கட்சியினரின் இந்த அவதூறு பிரச்சாரங்களை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். தவெக அரசின் 150 நாள் சாதனைகளுக்குக் கலங்கம் விளைவிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களுக்குத் தேர்தல் களத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தனது பேட்டியில் அமைச்சர் மரியா வில்சன் எச்சரித்துள்ளார்.
