“கலியுக கொடுமை.. வாயில் துணியை அடைத்து..” 80 வயது மூதாட்டியிடம் அத்துமீறய 13 வயது சிறுவன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“கலியுக கொடுமை.. வாயில் துணியை அடைத்து..” 80 வயது மூதாட்டியிடம் அத்துமீறய 13 வயது சிறுவன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.கே.பேட்டை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி, அக்டோபர் 13 அன்று தனியாக நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவருக்கு உதவுவது போல் நடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்தி, மூதாட்டியின் வாயில் துணியை வைத்துப் பலவந்தமாக அத்துமீற முயன்றபோது, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சிறுவனைப் பிடிக்க முயன்றனர்.

ஆரம்பத்தில் போலீஸ் வர தாமதமானதால் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஐந்து மணி நேரத்திற்குள் தப்பியோடிய சிறுவனைப் பிடித்துக் கைது செய்தனர். 80 வயது மூதாட்டியிடம் 13 வயது சிறுவன் அத்துமீற முயன்ற இந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in