CINEMA
“மெய்சிலிர்க்க வைக்கும் பேசப்போராட்டம்” முஃபாசா: தி லயன் கிங் பட Trailer வெளியீடு…!!
சிங்கத்தை வைத்து இதுவரையில் இரண்டு லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் வருடத்தில் ஒன்றும் 2019 ஆம் வருடத்தில் ஒன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதை தான். ஆனால் 2019 ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இருந்தது. இந்த படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கிக்கொண்டு அனைத்து காட்டு விலங்குகளுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூக வலைதளங்களில் வளம் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாக்கி உள்ளது படம். அனாதையாக வளர்ந்து தனக்கென்று ஆட்சி உருவாக்கும் முபாசாவின் கதையானது மெய்சிலிர்க்க வைக்கிறது . தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிக பகிரப்பட்டு வருகிறது..