CINEMA
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில்…. “கங்குவா” படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.