CINEMA
கங்குவா” “ப்ரோமோஷன் & படத்தை திரையிட மட்டும் இதனை கோடி செலவா…? ஞானவேல் சொன்ன தகவல்…!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படம் நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல், கங்குவா வட இந்தியாவில் 3,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ப்ரோமோஷன் & படத்தை திரையிட மட்டும் ரூ.22 கோடி செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.