CRIME
“செய்வினை கோளாறா..? அல்லது மர்ம நோய்களா..?” ஒரே வீட்டில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் மர்ம மரணம்.. வாயில் இரத்தம் வழிந்த கொடூரம்.. கதறும் குடும்பம்.. கிராமத்தையே உலுக்கிய சோக சம்பவம்…!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள மலிஹாபாத் பகுதியில் அமைந்துள்ள கன்ட்சாரா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி 3 வயது சிறுவன் திவ்யான்ஷ் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், 10-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் என்ற சிறுவனும், 12-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி என்ற சிறுமியும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த மூன்று குழந்தைகளின் வாயிலிருந்தும் இரத்தம் வெளியேறியதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், மூன்று குழந்தைகளையும் இழந்த அந்தக் குடும்பம் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தத் தொடர் மரணங்கள் குறித்துக் கிராம மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதோடு, செய்வினை கோளாறாக இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
