LATEST NEWS
12 வயது வித்தியாசம்… பகத் பாசிலை காதல் திருமணம் செய்தது ஏன்?.. முதல்முறையாக மனம் திறந்த நஸ்ரியா…!!
தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த நையாண்டி திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்தன. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மலையாளத்தில் வெளியான பெங்களூரு டேஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வழக்கமாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை ஓரம் கட்டுவது போல நஸ்ரியாவும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று விலகினார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதன் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகிய நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நஸ்ரியா, நானும் பகத் பாசிலும் ஒரு திரைப்படத்தில் இணைந்து வேலை செய்தோம்.
அப்போது எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. உடனே என்னுடைய காதலை வெளிப்படுத்தி நான் உங்களை ஒரு குழந்தை போல கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறியதும் அவர் ஏற்றுக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக்கு ஏற்றவர் இவர்தான். அதனால்தான் இவரை திருமணம் செய்து கொண்டேன் என்று நஸ்ரியா கூறியுள்ளார்.
