சத்தம் இல்லாமல் மகளின் நிச்சயதார்த்தத்தை முடித்த பிரபல வில்லன் நடிகர்… வெளியான அழகிய ஜோடியின் புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சத்தம் இல்லாமல் மகளின் நிச்சயதார்த்தத்தை முடித்த பிரபல வில்லன் நடிகர்… வெளியான அழகிய ஜோடியின் புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் சுரேஷ் கோபி.

மலையாளத் திரைப்பட நடிகரான சுரேஷ்கோபி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

மேலும் பல திரைப்படங்களில் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவை விட இவர் மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கு நேற்று திருமணம் நிச்சயதார்த்தம் மிக எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் மிக எளிமையான முறையில் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மாவேலி கரையை சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை தான் இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ரேயாஸ், லோகாய் தோழர்களே என்று கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ்கோபி மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பாக்யாவின் திருமணம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குருவாயூரில் திருமணம் நடைபெற உள்ளதால் ஜனவரி இருபதாம் தேதி திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

Advertisement

சுரேஷ்கோபி மற்றும் ராதிகா தம்பதியின் மூத்த மகள் பாக்கியாவிற்கு தற்போது பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in