LATEST NEWS
“எப்படி இருந்தாலும் நீங்க அழகுதான்”…. துளி மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்…. லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் சினிமாவில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலக இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. தற்போது பெற்றோர்களால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு நிச்சயம் முடிந்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க