LATEST NEWS
அய்யோ, கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சு?…. முகம் எல்லாம் வீங்கி இப்படி இருக்காங்களே…. ஷாக்கான ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
அதே சமயம் தனது காதலருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது பகிர்வது வழக்கம். இந்நிலையில் தற்போது முகம் வீங்கி மூக்கில் தண்ணீர் வரும் படி அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படத்தை சுருதிஹாசன் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
மேக்கப் இல்லாமல் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன் , மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் பிரச்சனை காரணமாக முகம் வீங்கிய நாள் என்றும் மாதவிடாய் நாட்கள் போன்றவற்றில் நீங்களும் ரசிப்பீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கூடிய விரைவில் அவர் குணமடைய வேண்டி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.