CINEMA
அடடா! என்ன அழகு… முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ‘பரிதாபங்கள்’ சுதாகர்…

சமூக வலைத்தளங்களில் முன்னணி யூடுபர்களாக வலம் வருபவர்கள் ‘பரிதாபங்கள் கோபி, சுதாகர்’. ரசிகர்கள் இவர்களை ‘கோசு’ என்று சுருக்கமாக அழைப்பார்கள். இவர்கள் பரிதாபங்கள் என்ற youtube சேனலை தொடங்கி அதில் பல்வேறு ட்ரோல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ட்ரெண்டிங் நிகழ்வுகளை டாபிக்காக எடுத்துக் கொண்டு அதை ட்ரோல் செய்து வீடியோக்கள் ஆக உருவாக்கி அதனை வெளியிடுவார்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாக பகிரப்படுகின்றன. கல்லூரி படிப்பில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் கோபி மற்றும் சுதாகர்.
Youtubeல் கலக்கி வந்த இந்த இருவரும் தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூட சமீபத்தில் நிறைவடைந்துவிட்டது. ஆனால், இதுவரை இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு முதலில் திருமணம் முடிந்தது. இவரைத்தொடர்ந்து கோபியும் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகனுடன் சுதாகர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..