LATEST NEWS
திருமணநாள் கொண்டாடி 3 நாள் தான் ஆச்சி அதுக்குள்ளயா..? சீரியல் நடிகை மஹாலக்ஷிமியின் கணவர் ரவீந்தர் திடீர் கைது…

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான். தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் குசும்பு பிடித்தவர். இவர் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் உடனே பகிர்ந்து விடுவார்.
சமீபத்தில் கூட இவர் தனது மனைவி மஹாலஷ்மியை பிரிய போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. சமீபத்தில் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Film Producer Ravindran Chandrasekar of Libra Productions has been arrested by Central Crime Branch for cheating a private firm to the tune of Rs. 16 crore @THChennai @chennaipolice_ pic.twitter.com/DMDuzVZwfj
— R SIVARAMAN (@SIVARAMAN74) September 7, 2023