VIDEOS
பருத்திவீரன் படத்தில் சிறு வயது முத்தழகாக நடித்த சிறுமிக்கு இப்படி ஒரு நிலையா?.. கலங்கியபடி குடும்ப கஷ்டம் பற்றி அளித்த உருக்கமான பேட்டி..!!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பருத்திவீரன். இந்தத் திரைப்படம் கார்த்தியின் முதல் திரைப்படமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் முத்தழகு கதாபாத்திரத்தில் சிறுவயது குழந்தையாக நடித்தவரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அந்த கேரக்டரில் மதுரையை சேர்ந்த கார்த்திகா தேவி என்ற பெண் நடித்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி வைரல் ஆகி வருகிறது . அதாவது மதுரை பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் கார்த்திகா தேவியின் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இவரின் நடன திறமையால் பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டார்.
தேனி பக்கத்தில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு அவரை கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சொன்னபடியே கார்த்திகா தேவையும் நடித்த நிலையில் அவரின் அப்பாவிடம் 100 அல்லது 500 ரூபாய் தான் சம்பளமாக கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சில திரைப்படங்களிலும் கார்த்திகா தேவி நடித்தார். ஆனால் சம்பளம் சொற்ப பணமாக தான் கிடைத்துள்ளது.
ஆனால் சில வருடங்கள் கழித்து கார்த்திகா தேவியின் அப்பா இறந்து போனதால் அவரது குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. இவர்களின் நிலைமையை பருத்திவீரன் திரைப்படத்திற்கு நடிக்க வைப்பதற்காக கூட்டிச் சென்றவரிடம் கூறிய நிலையில் அவர்கள் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. பருத்திவீரன் படபிடிப்பு அவரது ஊரில் நடக்கும் போது கார்த்திகா தேவியின் அப்பா பட குழுவினருக்கு பல உதவிகளை செய்துள்ளார். தற்போது மிகவும் சிரமப்படும் கார்த்திகா தேவி இது குறித்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.