LATEST NEWS
“அம்மாடியோ.. ஜஸ்ட் மிஸ்..” நள்ளிரவில் கட்டிலில் தூங்கிய நபர்கள்… சில அங்குல தூரத்தில் மரணமாய் நின்ற சிறுத்தை.. அப்புறம் நடந்த ட்விஸ்ட்.. நெஞ்சடைக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கயிற்றுக் கட்டிலில் இருவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர்கள் மிக அருகில் சிறுத்தை ஒன்று கடந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜின் ஹண்டியா வட்டத்தில் உள்ள டெலா கிராமத்தில் அக்டோபர் 9 அன்று நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெட்டவெளியில் தனித்தனி கட்டில்களில் இருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அங்கே வந்த அந்த வனவிலங்கு அவர்களுக்கு மிக அருகில், சில அங்குல தூரத்தில் நடந்து சென்று, எந்தவொரு தீங்கும் இழைக்காமல் அங்கிருந்து நகர்ந்துள்ளது.
மறுநாள் காலையில் சிசிடிவி பதிவுகளைப் பார்த்த பின்னரே, தங்களுக்கு நேர்ந்த இந்த அமானுஷ்ய ஆபத்தைப் பற்றி கிராம மக்கள் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையான அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சிறுத்தையைத் தேடும் பணிகளையும், அதை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்
