ச்சீ..! இப்படியா வக்கிரமாக சித்தரிப்பீங்க..? அமைச்சர் தம்பியிடம் மரியாதையாக பேசிய சாதாரண விஷயம்… நடிகை கஸ்தூரி காட்டம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ச்சீ..! இப்படியா வக்கிரமாக சித்தரிப்பீங்க..? அமைச்சர் தம்பியிடம் மரியாதையாக பேசிய சாதாரண விஷயம்… நடிகை கஸ்தூரி காட்டம்…!!

Published

on

பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஊடகங்கள் நிறைந்த அரங்கில் அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனிடம் தான் பரஸ்பர மரியாதையுடன் பேசிய சாதாரண உரையாடலை வக்கிரமாகச் சித்தரிப்பதாகத் தனது கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அரசியலில் கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் தனிமனித விரோதத்தை நான் ஒருபோதும் பாராட்டியதில்லை” என்று கூறியுள்ள அவர், இத்தகைய கீழ்த்தரமான அவதூறுகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தான் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணையப் போவதாகவும், அது பாஜகவின் பி-டீம் என்றும் வதந்தி பரப்புபவர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கஸ்தூரி சாடியுள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் வயிற்றெரிச்சலை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டே தான் பொதுவாழ்விற்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், எக்காலத்திலும் தனக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைமை மட்டுமே வழிகாட்டி என்றும் உறுதியளித்துள்ளார். ஒரு நாகரிகமான உரையாடலைத் தவறாகச் சித்தரித்து சாதி, தொழில் மற்றும் பெண்மையை இழிவுபடுத்தும் கயவர்களின் முயற்சிக்குத் தான் தணியப் போவதில்லை என்றும், தன் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள கட்சித் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in