VIDEOS
“எங்க அம்மாவுக்கு கேன்சர்”.. மேடையில் கண்கலங்கியபடி பேசிய பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். விரைவில் இவரின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் புற்றுநோய் பெற்ற ஆக போராடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசி அவர், தன்னுடைய அம்மாவுக்கு கடந்த வருடம் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறி சில உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.