LATEST NEWS
பிரபல நடிகையிடம் அத்துமீறிய ஜப்பான் வாலிபர்.. எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா..?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். கடந்த 1973-ஆம் ஆண்டு வெற்றிகரமாக வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிகைகள் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நடிகர் எம்.என் நம்பியார், மனோகர் அசோகன் ஆகியோர் நடித்தனர்.

#image_title
இவர்கள் தவிர இந்த படத்தில் தாய்லாந்து நடிகை மேட்டர் ரூம்ரத்தும் நடித்துள்ளார். இதன் படபிடிப்பு மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்தது. இந்நிலையில் படபிடிப்பின் போது நடிகை சந்திரகலாவிடம் ஜப்பானிய ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார்.

#image_title
இதனை கேள்விப்பட்டதும் எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ரசிகரை ஓங்கி அறைந்தார். உடனே அந்த ரசிகர் கிறங்கி 10 சுற்றுகள் வரை சுற்றி விழுந்தாராம். இதனை புலியூர் சரோஜா சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கூறியுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி 50 ஆண்களுக்கு மேல் ஆகிவிட்டது. சுமார் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

#image_title
இந்த படத்தில் இடம் பெற்ற பச்சைக்கிளி முத்துச்சரம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிய பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இன்று வரை கிராமப்புறங்களில் திருமணம் பொருத்தம் சுப நிகழ்ச்சிகளில் இந்த பாடல்கள் ஒலிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

#image_title