ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி இப்படி ஒரு குடும்ப பின்னணி கொண்டவரா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி இப்படி ஒரு குடும்ப பின்னணி கொண்டவரா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்களில் ஒருவர்தான் நடிகை ஹூமா குரேஷி. இவர் ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளை வென்றவர். அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். 35 வயதாகும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் இவரின் குடும்ப பின்னணி குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.அதாவது இவரின் குடும்பமே ஆரம்பத்தில் இருந்து ஹோட்டல் பிசினஸ் செய்து வந்துள்ளனர்.

Advertisement

அவரின் அப்பா சலீம் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் 1977 ஆம் ஆண்டில் இருந்து டெல்லி உட்பட பல வட மாநிலங்களில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அதுவும் குறிப்பாக அந்த ஹோட்டலில் கபாப் வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான உணவு. அந்த ஹோட்டல் விரைவில் சென்னையில் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in