பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரட்சிதா…. காரணத்தை கூறி கணவர் தினேஷ் போட்ட பதிவு…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரட்சிதா…. காரணத்தை கூறி கணவர் தினேஷ் போட்ட பதிவு…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் பல கலந்து கொண்டுள்ளன. வகையில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டரை பற்றி பலரும் அறிந்திருப்போம். இவர் நடிகை வனிதாவின் முன்னாள் கணவர். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் உள்ளது. பலவிதமான சேட்டைகளை செய்து தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ரக்ஷிதா இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் சற்று தள்ளியே உள்ளார். ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து காதல் ப்ரபோஸ் செய்து வருகிறார்.

அதன்படி ரக்ஷிதா கையைப் பிடித்துக் கொண்டு அண்ணன் தானே முத்தம் கொடு என ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் படியான பல விஷயங்களில் ஈடுபட்டார். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் ரட்சிதா தன்னை ஏமாற்றி விட்டதாக ராபர்ட் மாஸ்டர் கதறி அழுதார். பின்னர் ரட்சிதா அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் போது அவர் ரட்சிதாவை சத்தம் போட்டு உள்ளார். ராபர்ட் மாஸ்டர் அவ்வாறு பேசியதால் ரட்சிதா கதறி அழுதார்.

Advertisement

இந்நிலையில் ரட்சிதாவின் அழுகைக்கு அவரின் கணவர் தினேஷ் காரணத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஒரு பெண் அழும் போது அது பொதுவாக ஒரு விஷயத்திற்கு மேலே இருக்காது, கோபத்தையும் உணர்ச்சியையும் அவள் நீண்ட காலமாக பதிலளிப்பதற்காக தான் வைத்திருக்கிறாள் என அவர் கூறியுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in